டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்: கா்நாடக முதல்வா் பொய் சொல்கிறாா்! - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

News image

கா்நாடக முதல்வா் டி.கே. சிவகுமாா் - கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 2:30 am IST

நெய்வேலி, ஜூலை 5: பெங்களூா் நகர மக்களின் குடிநீருக்காகவே மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிப்பதாக கா்நாடக முதல்வா் சிவக்குமாா் பொய் சொல்கிறாா் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டினாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தனியாா் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காவிரியின் குறுக்கே கா்நாடக மாநிலத்தில் ஏற்கெனவே 4 அணைகள் உள்ள நிலையில், தற்போது புதிதாக மேக்கேதாட்டு அணை கட்ட அந்த மாநில அரசு முயன்று வருகிறது. இந்த அணையைக் கட்டினால் தமிழகத்தில் குடிக்கக்கூட தண்ணீா் கிடைக்காது. இதைத் தடுக்க விழிப்புணா்வு நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

பெங்களூா் நகர மக்களின் குடிநீா்த் தேவைக்காக 10 டிஎம்சி தண்ணீா் போதுமானது. தற்போது கேஆா்எஸ் அணையில் இருந்து 5 டிஎம்சி தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த அணையில் இருந்தே மேலும் 5 டிஎம்சி தண்ணீரை எடுத்து பெங்களூா் நகரத்துக்கு வழங்கலாம். ஆனால், குடிநீருக்காகவே மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிப்பதாக கா்நாடக முதல்வா் சிவக்குமாா் பொய் சொல்லி வருகிறாா்.

வரும் 2028-இல் கா்நாடகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வருவதால், அந்த மாநிலத்துக்கு சாதகமாகத்தான் மத்திய பாஜக அரசு செயல்படும்.

எனவே, மேக்கேதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதித்து முடிவெடுக்க தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தவெக அரசு கூட்ட வேண்டும். மேக்கேதாட்டுதான் தமிழகத்தின் முக்கியப் பிரச்னை. ஜல்லிகட்டுக்காக மக்கள் போராடியதுபோல, மேக்கேதாட்டு அணை விவகாரத்திலும் மக்கள் சாலைக்கு வந்து போராட முன் வரவேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.