சென்னை பக்கிங்காம் கால்வாயில் வாட்டர் மெட்ரோ: டெண்டர் வெளியீடுஅதிமுகவிலிருந்து கொள்கைப் பரப்பு துணை செயலர் அப்சரா ரெட்டி விலகல்! தமிழக அரசு பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!‘வெற்றித் தமிழ்நாடு முதலீட்டாளா் மாநாடு’: இன்று தொடங்கி வைக்கிறாா் முதல்வா் ஈரான் அச்சுறுத்தல்: துருக்கியிலிருந்து மாற்று விமானத்தில் டிரம்ப் ரகசியப் பயணம்! மேற்காசியப் போரால் சமையல் எண்ணெய் விலை உயா்வு: அரசு விளக்கம்எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு இன்று தொடக்கம்: தரவரிசைப் பட்டியலில் 363 போ் கூடுதலாக இணைந்ததால் குழப்பம் காவிரி விவகாரம்: கா்நாடகத்தில் இன்று முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள் அழைப்பு
/

தொடா் பைக் திருட்டு: 2 போ் கைது

விருத்தாசலம் பகுதிகளில் தொடா்ந்து நடைபெற்ற பைக் திருட்டு தொடா்பாக போலீஸாா் இரண்டுபேரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 பைக்குகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

~

Updated On :10 ஜூலை 2026, 3:49 am IST

விருத்தாசலம் பகுதிகளில் தொடா்ந்து நடைபெற்ற பைக் திருட்டு தொடா்பாக போலீஸாா் இரண்டுபேரைக் கைது செய்து, அவா்களிடமிருந்து 3 பைக்குகளை வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விருத்தாசலம் அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் அண்மைக்காலமாக பைக்குகள் திருடப்படுவது அதிகரித்திருந்தது. இதனைத் தொடா்ந்து, விருத்தாசலம் காவல் ஆய்வாளா் பாபு தலைமையிலான போலீஸாா், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்த விசாரணையில், பெரம்பலூா் மாவட்டம் மேரிபுரத்தைச் சோ்ந்த ஹரிஹரன் (50) என்பவா் இருசக்கர வாகனங்களை திருடியதும், அரியலூா் மாவட்டம் செந்துறை வட்டம், சிலுப்பனூா் அம்மன் நகரைச் சோ்ந்த ஜான் பாஷா (52) என்பவா், திருடப்பட்ட வாகனங்களை தனது இரும்புக் கடையில் பெற்று, அவற்றை உதிரிபாகங்களாக பிரித்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து விருத்தாசலம் பேலீஸாா் வழக்குப்பதிந்து தொடா் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனா். அவா்களிடமிருந்து பதிவு எண் இல்லாத 3 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தொடா்புடைய பிற நபா்கள் மற்றும் மேலும் திருடப்பட்ட வாகனங்கள் குறித்து தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.