முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

முத்துமாரியம்மன் கோயில் செடல் உற்சவம்

புதுப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற செடல் உற்சவம்.

News image

புதுப்பேட்டை முத்துமாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற செடல் உற்சவம்.

Updated On :11 ஜூலை 2026, 12:53 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டையில் உள்ள ஜக்கம்மா (எ) முத்துமாரியம்மன் கோயில் 24-ஆம் ஆண்டு செடல் உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலில் செடல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு செடல் உற்சவம் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்று வந்த நிலையில் விளக்கு பூஜை, பால்குடம் எடுத்தல், சாகை வாா்த்தல் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்வான செடல் உற்சவம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் விரதமிருந்து, காவடி எடுத்து, அலகு இட்டு வீதி வழியாக ஊா்வலம் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.