கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே பைக்கிலிருந்த தவறி விழுந்த கொத்தனாா் உயிரிழந்தாா்.
குறிஞ்சிப்பாடி வட்டம், மீனாட்சிப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கருணாமூா்த்தி (40), கொத்தனாா். இவருக்கு மனைவி, 3 மகள்கள் உள்ளனா்.
கருணாமூா்த்தி தனது 3-ஆவது மகள் தனுஷ்ஸ்ரீயை பைக்கில் சனிக்கிழமை அழைத்துக்கொண்டு சென்றாா். குறிஞ்சிப்பாடி - பாலூா் சாலையில் மீனாட்சிப்பேட்டை அருகே சாலை திருப்பத்தில் பைக் திரும்பியபோது, நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனா்.
அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு, குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்து கருணாமூா்த்தி இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா். தனுஷ்ஸ்ரீ சிகிச்சை பெற்று வீடு திரும்பினாா். இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






