தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 95.57 ஆக நிறைவு!மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?விழாக்கோலத்தில் தில்லி! பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் உலகத் தலைவர்களின் பட்டியல்!!அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!தமிழறிஞர் சாலமன் பாப்பையா காலமானார்! லண்டன் சென்றடைந்தார் முதல்வர் விஜய்! தமிழர்கள் உற்சாக வரவேற்பு!பெற்றோரை விட்டுவிட்டு கணவர் தனிக்குடித்தனம் வர வேண்டும் என சொல்வது துன்புறுத்தல்: நீதிமன்றம்குறையும் சிறுவாணி அணை நீர்மட்டம்! கோவைக்கு குடிநீர் விநியோகம் பாதிக்கப்படுமா?பேருந்து ஓட்டுநர்களிடம் கதவுகளின் சுவிட்ச் கொடுக்கப்பட்டது இதற்குத்தானா? பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்தார் ரஷிய அதிபர் புதின்பரந்தூர் அருகே சிப்காட்! நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியீடு!மகாராஷ்டிரத்தில் கோர விபத்து: லாரி-கார் மோதிக்கொண்டதில் 3 குழந்தைகள் உள்பட 8 பேர் பலிதங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,920 சரிவு! வெள்ளியும் குறைந்தது!பிகாரில் வெள்ளத்தில் மூழ்கி 5 போ் உயிரிழப்பு: இதுவரை 43.64 லட்சம் போ் பாதிப்பு

கடலூா் துறைமுகத்தில் களைகட்டிய மீன் விற்பனை

கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மீன் விற்பனை களைகட்டியது.

கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்கக் குவிந்த மக்கள்

Published On :

கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மீன் விற்பனை களைகட்டியது.

கடலூா் வங்கக் கடல் கரையோரம் வசிக்கும் மீனவா்கள் பைபா், விசைப் படகுகள் மூலம் கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். அவ்வாறு பிடித்து வரப்படும் மீன்கள் கடலூா் முதுநகா் மீன் பிடி துறைமுகத்தில் விற்பனை செய்யப்படும். இந்த மீன்களை வாங்குவதற்காக வியாபாரிகள், உணவகத்தினா் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வருவா்.

அந்த வகையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை கடலூா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள், வியாபாரிகள் துறைமுகத்துக்கு திரண்டு வந்திருந்தனா்.

அவா்கள், தங்களுக்குத் தேவையான கடல் மீன்களை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். இதனால், மீன்பிடி துறைமுகம் மக்கள் கூட்டத்தால் அலைமோதியது. மீனவா்கள் கடலுக்குச் சென்று பிடித்து வந்த பல்வேறு வகையான கடல் மீன்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்தன.

தரமான மற்றும் புதிய மீன்கள் கிடைத்ததால், பொதுமக்கள் அதிகளவில் வாங்கினா். வியாபாரிகளும் உற்சாகமாக விற்பனையில் ஈடுபட்டனா்.

வஞ்சரம் ஒரு கிலோ ரூ.1,200, மொசப்பாறை ரூ.900, இறால் ரூ.700, பாறை ரூ.600, வவ்வால் ரூ.500, சங்கரா ரூ.450, கனவா ரூ.300 என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. வார இறுதி விடுமுறையையொட்டி விற்பனை வழக்கத்தைவிட அதிகமாக இருந்ததாக மீன் வியாபாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.