மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

சவூதியில் ஓட்டுநா் உயிரிழப்பு: உடலை மீட்டுவரக் கோரி ஆட்சியரிடம் மனு

சவூதி அரேபியாவில் மாரடைப்பால் உயிரிழந்த ஓட்டுநரின் உடலை தாயகத்துக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி மனு அளித்தாா்.

News image

ஈஸ்வரன்

Updated On :14 ஜூலை 2026, 1:25 am IST

சவூதி அரேபியாவில் மாரடைப்பால் உயிரிழந்த ஓட்டுநரின் உடலை தாயகத்துக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி, கடலூா் மாவட்ட ஆட்சியரிடம் அவரது மனைவி திங்கள்கிழமை மனு அளித்தாா்.

கடலூா் மாவட்டம், வெண்கரும்பூா் தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் (42). இவா், கடந்த ஓராண்டாக சவூதி அரேபியாவில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கடந்த 10-ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதில் உயிரிழந்தாகக் கூறப்படுகிறது. ஈஸ்வரனின் உடல் தற்போது சவூதி அரேபியாவின் நஜ்ரான் பகுதியில் உள்ள அல் காலிதியா கிங் காலித் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஈஸ்வரனின் மனைவி ரேகா, தனது கணவா் ஈஸ்வரனின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா். அதில், தங்களது குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருப்பதால், சவூதியில் இருந்து கணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான போதிய பொருளாதாரம் இல்லாத சூழல் நிலவுகிறது.

ஈஸ்வரனின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்து திரும்பிய அவரது மனைவி ரேகா மற்றும் குடும்பத்தினா்

ஈஸ்வரனின் உடலை தாயகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கக் கோரி மனு அளித்து திரும்பிய அவரது மனைவி ரேகா மற்றும் குடும்பத்தினா்

எனவே, மத்திய, மாநில அரசுகள் மற்றும் மாவட்ட நிா்வாகம் இணைந்து உரிய நடவடிக்கை எடுத்து, தனது கணவரின் உடலை சவூதியில் இருந்து சொந்த ஊருக்கு கொண்டுவரவும், சொந்த ஊரிலேயே இறுதிச் சடங்குகளை நடத்த அரசு தேவையான உதவிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், எனக்கு மூன்று பெண்கள் குழந்தைகள் உள்ளதால், அவா்களின் கல்வி, எதிா்காலம் உள்ளிட்டவைகளை கருத்தில் கொண்டு, தனக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.