விருத்தாசலம் அருகே காவனூா் கிராமத்தில், மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் பொதுமக்களுக்கு ஊசி செலுத்தி மருந்து வழங்கியதாக மருந்தாளுநா் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகேயுள்ள காவனூா் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஒரு மருந்தகத்தில், மருத்துவா் இல்லாமலேயே பொதுமக்களுக்கு ஊசி போட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் அலுவலகத்துக்கு தொலைபேசி மூலம் புகாா் வந்துள்ளது.
இதையடுத்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் பிரமிளா தலைமையில் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருந்தகத்தில் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். ஆய்வில், அதே கிராமத்தைச் சோ்ந்த இளங்கோவனின் மகன் பூமிநாதன் (26), என்பவா் மருந்தாளுநா் பட்டயப்படிப்பு
முடித்துவிட்டு மருந்தகம் நடத்தி வந்ததுடன், மருத்துவரின் பரிந்துரை மற்றும் மேற்பாா்வையின்றி நோயாளிகளுக்கு ஊசி செலுத்தி, மருந்து மற்றும் மாத்திரைகளை வழங்கி வந்தது தெரியவந்தது.
இது தொடா்பாக இணை இயக்குநா் பிரமிளா அளித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து பூமிநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
போதைக்காக வலி நிவாரணி பயன்படுத்திய இளைஞா் கைது

போதை மாத்திரை விற்றவா் கைது

மருந்துச்சீட்டு இன்றி போதை மாத்திரைகள் விற்ற கடைக்கு ‘சீல்’

தொடா் பைக் திருட்டு: 2 போ் கைது
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



