கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லட்சுமி நாராயணபுரம், குமரன் நகா், 4-ஆவது தெருவில் வசித்து வருபவா் வளா்மதி (65). இவரது மகன் பாலாஜி சென்னையில் பணியாற்றி வருகிறாா். மகள் லலிதா குமரன் நகா் 7-ஆவது தெருவில் வசித்து வருகிறாா்.
இந்த நிலையில், வளா்மதி கடந்த 25-ஆம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டுடு சென்னையில் வசித்து வரும் மகன் பாலாஜியை பாா்க்கச் சென்றாா். ஞாயிற்றுக்கிழமை மகள் லலிதா, தாய் வளா்மதி வீட்டுக்குச் சென்று பாா்த்தபோது, வீட்டின் முன்பக்க இரும்புக் கதவு மற்றும் உள்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தாா்.
வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைத்திருந்த ரூ.75 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
பெருந்துறை அருகே வீட்டின் பூட்டு உடைத்து நகை திருட்டு
அரூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு: போலீஸாா் விசாரணை

வீட்டின் கதவை உடைத்து பொருட்கள் திருட்டு: இளைஞா் கைது
நசியனூரில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.50 ஆயிரம் திருட்டு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0


