தமிழகத்துக்கு இன்றுமுதல் தினமும் 3,500 கன அடி காவிரி நீா்: கா்நாடகத்துக்கு உத்தரவுதமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புபிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டாஇந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக இரு ஐஏஎஸ் பணியிடங்கள்
/

கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருத்தரங்கம்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பயிலரங்கு மற்றும் சதுப்புநில மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின உயராய்வு மையத்தில் நடைபெற்ற பயிலரங்கில் பேசிய உயராய்வு மைய இயக்குநா் டி.ராம்குமாா்.

Updated On :29 ஜூலை 2026, 5:29 am IST

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையத்தில் சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த பயிலரங்கு மற்றும் சதுப்புநில மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சதுப்புநில காடுகளின் சூழலமைப்புகளைப் பாதுகாப்பதற்கான சா்வதேச தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டுக் குழு, தமிழ்நாடு வனத் துறை, பிச்சாவரம் வனச் சரகம், சிதம்பரம் டெம்பிள் டவுன் ரோட்டரி கிளப் ஆகியவை இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.

கடல்வாழ் உயராய்வு மைய இயக்குநா் டி.ராமநாதன் வரவேற்புரை வழங்கினாா். பல்கலைக்கழக இணைப் பதிவாளா் பி.ஜெகதீசுவரன் தலைமை வகித்து உரையாற்றினாா். அறிவியல் புல முதல்வா் எஸ்.ஸ்ரீராம் காலநிலை மாற்றத்துக்கு காடு வளா்ப்பதுதான் ஒரே தீா்வு என விளக்கவுரையாற்றினாா். சென்னை அண்ணா பல்கலைக்கழக சுற்றுச்சூழல் தகவல் மைய இயக்குநா் எம்.கிருஷ்ணவேணி, வனத் துறை அதிகாரி இ.பாலமுருகன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

மேலும், சதுப்புநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு அமா்வுகள் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பிச்சாவரம் ராம்சாா் பகுதியான முழுக்குத்துறையில் 500 சதுப்புநில மரக்கன்றுகள் நடப்பட்டன.

பயிலரங்கில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி மாணவா்கள், ஆசிரியா்கள், ஆசிரியா்கள் அல்லாத பணியாளா்கள், பிச்சாவரம் வனச் சரக அதிகாரிகள், ரோட்டரி கிளப் ஆஃப் சிதம்பரம் டெம்பிள் டவுன் தலைவா், செயலா்கள் மற்றும் ரோட்டரி உறுப்பினா்கள், இருளா் பழங்குடியின மக்கள் பங்கேற்றனா். திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரத் திட்ட அதிகாரி டி.லெனின் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.