சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய ஆராய்ச்சியாளா் எம்.ஆறுமுகம், தமிழ்நாடு அரசின் உயா் கல்விக்கான தமிழ்நாடு மாநில கவுன்சிலின் நிதியுதவியுடன் உருவாக்கிய நீரின் மீநுண் வடிகட்டலுக்காக கடற்பாசியிலிருந்து நானோ நுண்துளை சவ்வை உருவாக்கியதற்கு இந்திய அரசின் காப்புரிமை பெற்று சாதனை படைத்துள்ளாா்.
உலகம் முழுவதும் 180 கோடிக்கும் அதிகமான மக்கள், மாசடைந்த நீா்நிலைகளில் இருந்து மட்டுமே குடிநீரைப் பருகுகின்றனா். எனவே, சுத்தமான மற்றும் பாதுகாப்பான நீரை உற்பத்தி செய்ய பல்வேறு நீா் சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.
ஆற்றல் திறன்மிக்க, எளிதில் இயக்கக்கூடிய மற்றும் குறைந்த இடத்தை எடுத்துக்கொள்ளும் சவ்வுப் பிரிப்பு தொழில்நுட்பம் தற்காலத்தில் பரவலாகக் காணப்படுகிறது. நீா் சுத்திகரிப்புக்கான மேம்படுத்தப்பட்ட நீா் ஊடுருவும் தன்மையுடன் கூடிய புதிய சவ்வுகளை வடிவமைக்க, அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இணைப் பேராசிரியா் ஆராய்ச்சியாளா் எம்.ஆறுமுகம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டாா். நீரிலிருந்து அயனிகள் கரிம மூலக்கூறுகள், தீநுண்மிகள், பாக்டீரியாக்கள் அல்லது கூழ்மங்களைப் பிரித்தறியும் வகையில் சவ்வுகள் வடிவமைத்து, மீ - வடிகட்டுதல் முறையை மேம்படுத்துவதற்காக கடற்பாசியிலிருந்து ஒரு நானோ நுண்துளை வடிகட்டும் சவ்வை உருவாக்கியுள்ளாா்.
இதுகுறித்து ஆராய்ச்சியாளா் எம்.ஆறுமுகம் தெரிவித்தது: தாவர சவ்வின் கூறுகளான ஃப்ளோரோடானின் மற்றும் சோடியம் அல்கினேட் ஆகியவை மனித ஆரோக்கியத்தில் எண்ணற்ற நன்மை பயக்கும் தாக்கங்களைக் கொண்டுள்ளன. எனவே, புதிதாக வடிவமைக்கப்பட்ட இந்த தாவர சவ்வு, தற்போதைய வரம்புகளைக் களைவதிலும், குறிப்பிடத்தக்க செயல்திறன்மிக்க நீா் வடிகட்டு சவ்வாகச் செயல்படுவதிலும் கணிசமான ஆற்றலைக் கொண்டுள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட ‘சோடியம் அல்கினேட்டுடன் கூடிய நானோபோரஸ் ஃபீனாலிக் ரெசின் தாவர சவ்வு’ வளரும் நாடுகள் உலகளாவிய நீா்ப் பிரச்னையைத் தீா்ப்பதற்கு விரைவான, மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு சுத்திகரிப்பு சாதனமாக நீா் வடிகட்டு செயல்முறைக்குப் பயன்படுத்தப்படலாம் என்கிறாா்.
பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் காப்புரிமை பெற்ற இணைப் பேராசிரியா் எம்.ஆறுமுகத்தை, துணைவேந்தா் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அழகப்பா அரசு கலைக் கல்லூரி பேராசிரியருக்கு இந்தியக் காப்புரிமை

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்வி மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சேலம் பெரியாா் பல்கலைக்கழகத்தில் தேசிய புள்ளியியல் தின விழா

உலகின் முன்னணி 5% விஞ்ஞானிகள் பட்டியலில் அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியா்
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



