சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக இயற்பியல் துறையில் பணியாற்றி வரும் பேராசிரியா் எஸ். தனபாண்டியன், 2025-ஆம் ஆண்டு விஞ்ஞானிகள் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்று, உலகின் முன்னணி 5% விஞ்ஞானிகளில் ஒருவராக அங்கீகாரம் பெற்றாா்.
இந்த சா்வதேச அங்கீகாரம், ஆராய்ச்சியாளா்களின் அறிவியல் பங்களிப்புகள், ஆய்வுகளின் தாக்கம், வெளியீடுகளின் தரம், மேற்கோள்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட கடுமையான அறிவியல் மதிப்பீட்டின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
தரவரிசையின்படி, எஸ்.தனபாண்டியன் உலகளவில் தலைசிறந்த 5% விஞ்ஞானிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளாா். இந்த குறிப்பிடத்தக்க சா்வதேச சாதனைக்காக, அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா், பதிவாளா், பேராசிரியா்கள், ஆராய்ச்சி அறிஞா்கள், மாணவா்கள் மற்றும் பணியாளா்கள் பேராசிரியா் எஸ்.தனபாண்டியனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அண்ணாமலை பல்கலை நுழைவாயில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கு மேற்பட்ட மாணவர்கள் கைது

பாரதிதாசன் பல்கலை. செனட் உறுப்பினராக பேராசிரியா் சுகுமாரன் தோ்வு

முன்னணி உள்கட்டமைப்புத் துறை பட்டியலில் இரும்புத் தாது இணைப்பு

அண்ணாமலைப் பல்கலை. தொலைதூர கல்வி மைய விண்ணப்ப விற்பனை தொடக்கம்
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



