இளைஞர்களே இந்தியாவின் மிகப்பெரிய பலம்: ராகுல் காந்திஉதயநிதி ஸ்டாலினைச் சந்தித்து நன்றி தெரிவித்த விவசாயிகள்!நாங்கள் தொகுதி மறுவரைக்கு முழுவதும் எதிரானவர்கள் அல்லர்: கனிமொழி எம்.பி.மேக்கேதாட்டு பிரச்னையை திசை திருப்பவே அனைத்துக் கட்சிக் கூட்டம்: கனிமொழி முழுமையான பயிர்க் கடன் தள்ளுபடிகோரி ஆக. 14-ல் அதிமுக ஆர்ப்பாட்டம்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக, அதிமுக பங்கேற்கவில்லை என்றாலும் இதே நிலைப்பாட்டை எடுப்பார்கள்: திருமாவளவன்தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதிபாபா வங்காவின் கணிப்புகள் நிறைவேறும் நேரம் நெருங்குகிறது! 2026- க்கு என்ன சொல்லியிருக்கிறார்?முன்னணி சூரியகாந்தி எண்ணெய் நிறுவனத்துக்கு அபராதம்!கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் ஆக. 14-ல் விசாரணைமுதல்வர் விஜய்யின் அனைத்துக் கட்சி கூட்டத்தை புறக்கணித்த 37 எம்.பி.க்கள்!
/

முன்னணி உள்கட்டமைப்புத் துறை பட்டியலில் இரும்புத் தாது இணைப்பு

முன்னணி உள்கட்டமைப்புத் துறை பட்டியலில் இரும்புத் தாது இணைப்பு

News image
Updated On :19 ஜூலை 2026, 2:20 am IST

நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகளை மேலும் துல்லியமாகக் கணக்கிடும் நோக்கில், முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் பட்டியலில் இரும்பு தாதுவை மத்திய அரசு புதிதாக இணைத்துள்ளது.

நாட்டின் தொழில்துறை உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் இரும்பு தாதுவின் பங்களிப்பு மிக முக்கியமானது என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், முன்னணி உள்கட்டமைப்புத் துறைககளின் எண்ணிக்கை 8-லிருந்து 9-ஆக உயா்ந்துள்ளது.

தற்போது நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு தயாரிப்புகள், உரங்கள், எஃகு, சிமென்ட், மின்சாரம் ஆகிய 8 துறைகள் மட்டுமே மாதாந்திர அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், 2011-12-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டு வந்த இந்த உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சி குறியீடு, தற்போது 2022-23 ஆம் ஆண்டை புதிய அடிப்படை ஆண்டாகக் கொண்டு கணக்கிடப்படும். இப்புதிய மாற்றங்களுடன் கூடிய ஜூன் மாத தரவு வரும் திங்கள்கிழமை முறைப்படி வெளியிடப்பட உள்ளது.

முன்னதாக, கடந்த மே மாதத்தில் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் உற்பத்தி சரிந்ததால், முன்னணி உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த வளா்ச்சி 7 மாதங்களில் இல்லாத அளவாக 0.5 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.