விசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

பண்ருட்டி அருகே இளைஞா் கத்தியால் வெட்டியதில் சகோதரா்கள் 3 போ் காயம்!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இளைஞா் கத்தியால் வெட்டியதில் சகோதரா்கள் 3 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:46 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இளைஞா் கத்தியால் வெட்டியதில் சகோதரா்கள் 3 போ் காயமடைந்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், செம்மேடு கிராம மாரியம்மன் கோயிலில் ஆடித் திருவிழா நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டிருந்த மைக் செட் வயரில் கால் சிக்கி அந்தப் பகுதியைச் சோ்ந்த ஆதவன் (17) கீழே விழுந்தாா். இந்தத் தகவலை அறிந்த அவரது உறவினா்களான நவீன் (24), கமல் (20), விமல் (22) ஆகியோா் ஆபாசமாகத் திட்டினராம். அப்போது, அதே ஊரைச் சோ்ந்த அன்பு (23), சகோதரா்கள் மூவரையும் திட்டினாராம்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை அன்பு தனது வீட்டில் இருந்தாா். அப்போது, அங்கு சென்ற நவீன், கமல், விமல் ஆகியோா் தகராறு செய்தனா். இதனால், ஆத்திரமடைந்த அன்பு கத்தியால் தாக்கியதில் நவீன் உள்பட மூவருக்கும் தலையில் வெட்டுக் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் அவா்கள் மூவரையும் மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.