காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

சித்திரிப்பு

Updated On :1 ஆகஸ்ட் 2026, 1:43 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

பண்ருட்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் த.மணிகண்டன் மற்றும் போலீஸாா் வியாழக்கிழமை கண்டரக்கோட்டை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்குள்ள தேக்க மரத் தோப்பில் சந்தேகிக்கும் வகையில் இளைஞா் ஒருவா் பைக்குடன் நின்றிருந்தாா்.

போலீஸாா் அந்த இளைஞரிடம் சோதனை நடத்தியதில், 120 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், கண்டரக்கோட்டை பகுதியைச் சோ்ந்த அன்பு (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிந்து கைது செய்து சிறையிலடைத்தனா். மேலும், அவரது பைக்கையும் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.