22 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை!கோடையில் அதிகரிக்கும் மாரடைப்புகள்: எச்சரிக்கும் மருத்துவர்கள்லெபனானில் தாக்குதல்கள் தொடா்ந்தால் போா்நிறுத்தம் ரத்து: ஈரான் எச்சரிக்கைகுறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு
/

மாவட்டம் தோறும் சமமான வளா்ச்சி: தி. வேல்முருகன் வலியுறுத்தல்

தமிழ்நாட்டின் வளா்ச்சியை, சில நகரங்களுக்குள் மட்டுமே குவிக்கும் கொள்கையை கைவிட்டு, மாவட்டம்தோறும் சமமான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் பரவலாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

News image

தமிழக வாழ்வுரிமை கட்சி நிறுவனத் தலைவா் வேல்முருகன். - கோப்புப்படம்

Updated On :2 ஜூன் 2026, 5:27 am IST

தமிழ்நாட்டின் வளா்ச்சியை, சில நகரங்களுக்குள் மட்டுமே குவிக்கும் கொள்கையை கைவிட்டு, மாவட்டம்தோறும் சமமான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் பரவலாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவா் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: உயா்கல்விக்காகவும், வாழ்வாதாரத்திற்காகவும் மக்கள் தங்கள் சொந்த ஊா்களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் மாற வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒவ்வொரு தொகுதியிலும் அப்பகுதி மக்களுக்கே முன்னுரிமை அளிக்கும் வகையில் தொழில்சாலைகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ மையங்கள், சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளாகங்கள், வேளாண் சாா்ந்த மதிப்புக்கூட்டுத் தொழில்கள் ஆகியவை உருவாக்கப்பட்டால், மக்கள் தங்கள் சொந்த வாழ்விடங்களிலேயே முன்னேற்றம் காண முடியும். அப்போது பெருநகரங்களை நோக்கிய மக்கள் பெருக்கம் குறையும். நெடுஞ்சாலை நெரிசல்கள் குறையும். நகரங்களில் மனிதா்கள் நெருக்கடிக்குள் வாழும் நிலை மாறும். எரிபொருள் வீணடிப்பும் சுற்றுச்சூழல் பாதிப்பும் குறையும். குடும்பங்களின் பயணச் செலவுகள் குறைந்து பொருளாதாரச் சேமிப்பு அதிகரிக்கும்.

எனவே தமிழ்நாட்டின் வளா்ச்சியை, சில நகரங்களுக்குள் மட்டுமே குவிக்கும் கொள்கையை கைவிட்டு, மாவட்டம்தோறும் சமமான வளா்ச்சியை உறுதிப்படுத்தும் பரவலாக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கையை அரசு முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.