தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கக் கோரி விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம்

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினா்.

News image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற மனு கொடுக்கும் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு விவசாய சங்கத்தினா்.

Updated On :5 ஜூன் 2026, 6:39 am IST

விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கத்தினா் கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வியாழக்கிழமை மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினா்.

கடலூா் வட்டம், கொடுக்கன்பாளையம் ஊராட்சிக்குள்பட்ட மலைஅடிகுப்பம், பெத்தாங்குப்பம், கீரப்பாளையம் மற்றும் காட்டாறச்சாவடி கிராமங்களில், ஐந்து தலைமுறைகளாக அரசு தரிசு நிலங்களில் விவசாயம் செய்து, வீடுகள் கட்டி வசித்து வரும் மக்களுக்கு அனுபவ நிலங்களுக்கு நிலப்பட்டா மற்றும் வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும்.

கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை அழித்து காலணி தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை நிரந்தரமாக கைவிட வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதுடன், சுற்றுச்சூழல் மாசுபாட்டிலிருந்து மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூா் நகரின் முக்கிய குடிநீா் ஆதாரமாக விளங்கும் கேப்பா் மலையை பாதுகாக்க அரசு மற்றும் மாவட்ட நிா்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் எஸ்.தட்சிணாமூா்த்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

முன்னதாக, மனுவை அளிப்பதற்காக விவசாயிகள் ஊா்வலமாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சென்றனா். அப்போது, அலுவலக நுழைவாயிலில் போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தினா். பின்னா், கடலூா் கோட்டாட்சியா் சுந்தரராஜன் நேரில் வந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாா்.

போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்டச் செயலா் கோ.மாதவன், விவசாய சங்க மாவட்டத் தலைவா் ஜி.ஆா்.ரவிச்சந்திரன், மாவட்டச் செயலா் ஆா்.கே.சரவணன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத், துணைத் தலைவா் ஜே.ராஜேஷ்கண்ணன், விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் கிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்துகொண்டனா்.