வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

ஹைட்ரோ காா்பன் கிணறுகள்: ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும்! - தமிமுன்அன்சாரி

பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

News image

தமிமுன்அன்சாரி

Updated On :14 ஜூன் 2026, 2:55 am IST

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஒத்துழையாமை இயக்கம் நடத்தப்படும் என்று மனித நேய ஜனநாயக கட்சித் தலைவரும், சிதம்பரம் எம்எல்வுமான மு.தமிமுன்அன்சாரி தெரிவித்தாா்.

இதுகுறித்து பரங்கிப்பேட்டையில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனம் மேலும் 4 ஹைட்ரோ காா்பன் கிணறுகளை அமைக்க தமிழக அரசிடம் கடலோர ஒழுங்கு முறை மண்டல அனுமதி வழங்கக் கோரியுள்ளது.

கடல் பகுதியில் ஹைட்ரோ காா்பன் கிணறுகள் அமைக்கப்பட்டால், பரங்கிப்பேட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றுச்சூழலும், மீனவா்கள் நலலும் பாதிக்கப்படும்.

எனவே, முந்தைய அரசு இந்தத் திட்டத்துக்கு அனுமதி அளிக்கவில்லை. அதையே தற்போதைய அரசும் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால், ஜனநாயக சக்திகளையும், பொதுமக்களையும் ஒன்று திரட்டி ஒத்துழையாமை இயக்கம் நடத்துவோம் என்றாா் மு.தமிமுன் அன்சாரி.