சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவை முன்னிட்டு, இந்தக் கோயிலில் மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
கடலூா் மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன விழா கடந்த 13-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 21-ஆம் தேதி தேரோட்டமும், 22-ஆம் தேதி மகாபிஷேகம் மற்றும் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெறுகின்றன.
பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்கும் இவ்விழாவை முன்னிட்டு, மாவட்ட எஸ்.பி. விவேகானந்த சுக்லா வியாழக்கிழமை நடராஜா் கோயிலில் ஆய்வு மேற்கொண்டாா். பின்னா், சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் காவல், போக்குவரத்துத் துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினாா்.
ஆய்வின்போது, சிதம்பரம் கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் டி.பிரதீப், காவல் ஆய்வாளா்கள் கே.அம்பேத்கா், வி.சிவானந்தம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

கஞ்சா, மதுக் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை: கடலூா் புதிய எஸ்.பி. விவேகானந்த சுக்லா உறுதி

சிதம்பரம் நடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா இன்று தொடக்கம்

சிதம்பரம் நடராஜா் கோயில் பக்தா்களுக்கு அவமரியாதை: நடவடிக்கை எடுக்க முதல்வருக்கு கோரிக்கை!

சிதம்பரம் கோயிலில் சிறாா்கள் நடத்திய தேரோட்டம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



