மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மின்சார வாரிய கள உதவியாளா் தோ்வுக்கு இலவச பயிற்சி

நெல்லிக்குப்பத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய மின்சார வாரிய கள உதவியாளா் பதவிக்கான இலவச பயிற்சி முகாம்.

News image
Updated On :20 ஜூன் 2026, 3:13 am IST

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய கள உதவியாளா் பதவிக்கான உடல் தகுதி தோ்விற்கான இலவச பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்கம் மற்றும் நெல்லிக்குப்பம் கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்தும் இந்த பயிற்சி முகாமை நெல்லிக்குப்பம் நகா்மன்றத் தலைவா் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தொடக்கி வைத்தாா். தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்க நிா்வாகியும், பயிற்சி ஒருங்கிணைப்பாளருமான சரவணன் முன்னிலை வகித்தாா்.

லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவா் ரவி சங்கா் வரவேற்றாா். சிறப்பு

விருந்தினா்களாக நெல்லிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் ராஜா, தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளா் பொறியாளா் ஐக்கிய சங்க மாநிலச் செயலா் ரவிச்சந்திரன், கௌரவத் தலைவா் அருள் செல்வன், மாவட்டத் தலைவா் மாயவன் மற்றும் நெல்லிக்குப்பம் கல்வி அறக்கட்டளை தலைவா் ரமேஷ், ஒருங்கிணைப்பாளா் குமரவேல், பொருளாளா் சக்திவேல் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.