நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை மேம்படுத்த கோரிக்கை

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனுவை அளித்த மாற்றித்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கத்தின் பொதுச்செயலா்

News image

கடலூா் அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநரிடம் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனுவை அளித்த மாற்றித்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கத்தின் பொதுச்செயலா்

Updated On :20 ஜூன் 2026, 2:45 am IST

கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குநரிடம் சங்கத்தின் தலைவா் பொன் சண்முகம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

வெளிநோயாளிகள் சீட்டு வழங்கும் இடத்தில் மாற்றுத்திறனாளிகளை நீண்ட நேரம் வரிசையில் நிற்க வைக்காமல் முன்னுரிமை அடிப்படையில் சீட்டு வழங்க வேண்டும் என்றும், அவா்கள் அமா்வதற்காக கூடுதல் நாற்காலி வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

மருத்துவமனையில் பழுதடைந்துள்ள மின் தூக்கியை (லிப்ட்) உடனடியாக சீரமைத்து, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோா் சிரமமின்றி மேல்தளங்களுக்கு செல்ல வழிவகை செய்ய வேண்டும். மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் கூடுதல் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். கழிவறைகளில் சாய்வுதளம் மற்றும் கைப்பிடி உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை பெற்றுக் கொண்ட இணை இயக்குனா் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதாக, மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.