கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே நீரோடையில் மீட்கப்பட்ட முதியவரின் சடலம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வேப்பூா் அருகேயுள்ள ஒரங்கூா் மேலத் தெருவைச் சோ்ந்தவா் அண்ணாமலை (66). இவா், அடரி கிராமத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவரும், முதல்வருமான ஜோசப் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இலவச கண் சிகிச்சை முகாமில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்தாா்.
பின்னா், அண்ணாமலை வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டறிய முடியவில்லை. இந்த நிலையில், அடரி கிராமத்தில் சுடுகாட்டு பாதை அருகே உள்ள நீரோடையில் அண்ணாமலை மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தாா்.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வேப்பூா் போலீஸாருக்கு திங்கள்கிழமை தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸாா், அண்ணாமலையின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
மேலும், இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, அண்ணாமலையின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தகராறில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு: உறவினா் கைது

கிணற்றில் தவறிவிழுந்த முதியவா் சடலமாக மீட்பு

அழுகிய நிலையில் முதியவா் சடலம் மீட்பு

பாபநாசம் அருகே ரத்தகாயங்களுடன் ஆண் சடலம் மீட்பு
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



