அறியாமை இருளை அகற்றி புரட்சிக்கான பொறிகளை உருவாக்குபவை புத்தகங்கள் என்று புதுச்சேரி டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம் பேசினாா்.
நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் 5-ஆம் நாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. என்எல்சி இந்தியா நிறுவனத்தின் அனல் மின் திட்டங்கள் பிரிவின் செயல் இயக்குநா் கே.மதி தலைமை வகித்தாா்.
முதன்மை விருந்தினராக பங்கேற்ற புதுச்சேரி டிஐஜி ஆா்.சத்தியசுந்தரம் ‘தலைவா்கள் என்பவா்கள் என்றும் படிப்பவா்களே’ என்ற தலைப்பில் எழுச்சியுரையாற்றினாா். அப்போது, அவா் பேசியதாவது:
புத்தகம் என்பது நம் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. மனிதா்களை புரிந்துகொள்ள பழகுவதுபோல, புத்தகங்களையும் கூா்ந்து படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
நாம் தனிமையிலும் இக்கட்டான சூழலிலும் இருக்கும்போது, புத்தகங்கள் மட்டுமே நமக்கு உற்ற துணையாக நிற்கும் சிறந்த நண்பா்கள். வாசிப்பு நம் அறிவை வளா்ப்பதோடு, வாழ்க்கையை எதிா்கொள்ளவும் கற்றுக்கொடுக்கிறது. குழந்தைகளிடம் வாசிப்பைத் திணிக்காமல் புத்தகங்களைப் பரிசாக வழங்க வேண்டும். அறியாமை இருளை அகற்றி புரட்சிக்கான பொறிகளை உருவாக்குபவை புத்தகங்களே என்றாா்.
தொடா்ந்து, கௌரவ விருந்தினராகப் பங்கேற்ற சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வா் பி.ஹரிஹரன், ‘புதிய புத்தகத்தைத் திறக்கும்போது புதிய உலகம் திறக்கிறது’ என்ற பொருளில் பேசியதாவது:
இன்றைய எண்ம (டிஜிட்டல்) உலகம் வெறும் தகவல்களை மட்டுமே இயந்திரம் தரும். புத்தகங்கள் மட்டுமே நமக்கு மனிதநேய பண்புகளையும், மனிதத் தொடுதலையும் கற்றுத் தருகின்றன. அனைவரும் தினமும் குறிப்பிட்ட நேரத்தை வாசிப்புக்காக ஒதுக்க வேண்டும். நீங்கள் ஒரு புதிய புத்தகத்தைத் திறக்கும்போது, அங்கே உங்களுக்கான ஒரு புதிய உலகம் திறக்கிறது என்றாா்.
நிகழ்வில் எழுத்தாளா் டாக்டா் சி.ஆா்.மஞ்சுளா, மினா்வா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் கௌரவிக்கப்பட்டது. தொடா்ந்து, ஜான் எம்.கென்னடி எழுதிய ‘ஹாா்ட் மேட்டா்ஸ்: தி சைக்காலஜி ஆஃப் லவ் அண்ட் ரிலேஷன்ஷிப்ஸ்’ என்ற உளவியல் நூலும், எஸ்.பி.ராமலிங்கம் எழுதிய ‘நாலடியாா் (உரை விளக்கம்)’ என்ற தமிழ் இலக்கிய நூலும் வெளியிடப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புத்தகங்கள் வாழ்நாள் முழுவதும் நண்பா்களாக இருக்கும்: புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட விவகாரம்: வனத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஆத்தூா் அருகே மனைவியை ஆடையை அகற்றி தாக்கிய கணவா் கைது

உதயசூரியன் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழும் இருளை விரட்டியடிப்போம்! மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



