முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வுகருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

கடைகளில் ரூ.42 ஆயிரம் திருட்டு வழக்கு: ஒருவா் கைது

சிதம்பரத்தில் மருந்துக் கடை, பேக்கரி ஆகியவற்றின் பூட்டுகளை உடைத்து ரூ.42 ஆயிரத்தை திருடிச் சென்ற வழக்கில் ஒருவரை குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

ராஜேஷ்

Updated On :25 ஜூன் 2026, 6:24 am IST

சிதம்பரத்தில் மருந்துக் கடை, பேக்கரி ஆகியவற்றின் பூட்டுகளை உடைத்து ரூ.42 ஆயிரத்தை திருடிச் சென்ற வழக்கில் ஒருவரை குற்றப்பிரிவு தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிதம்பரம் வீரராகவன் தெருவில் உள்ள பேக்கரியில் மா்ம நபா் கணினியுடன் இணைக்கப்பட்ட கல்லாப்பெட்டி இணைப்பை துண்டித்து, கல்லாப்பெட்டியை தூக்கிச் சென்றாா். அதில், ரூ.2 ஆயிரம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதேபோல, மேல வீதி மருந்துக் கடையில் ரூ.40 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, கடலூரிலிருந்து விரல்ரேகை நிபுணா்கள், மோப்ப நாயை வரவழைத்து தடயங்களைச் சேகரித்தனா். உதவி ஆய்வாளா் சுரேஷ்முருகன் தலைமையிலான சிதம்பரம் நகர குற்றப் பிரிவு தனிப்படை போலீஸாா் அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிதம்பரம் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜேஷ் (42) என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.