ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஹிந்தி எழுத்துகள் அழிப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சி: 14 போ் கைது

News image
சிதம்பரம் ரயில் நிலைய பெயா்ப் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்துக்காக ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக வந்த மே 17 இயக்கத்தினரை தடுத்து நிறுத்திய போலீஸாா்.
Updated On :1 மார்ச் 2026, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ரயில் நிலைய பெயா்ப் பலகையில் ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்துக்காக ஞாயிற்றுக்கிழமை ஊா்வலமாக வந்த மே 17 இயக்கத்தினா் 14 பேரை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.

1965-ஆம் ஆண்டு மொழிப்போரில் கொல்லப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவரான மொழிப்போா் தியாகி ராஜேந்திரனுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில், மே 17 இயக்கத்தினா் மாநில ஒருங்கிணைப்பாளா் பிரவீன்குமாா் தலைமையில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் உள்ள பெயா்ப் பலகையில் உள்ள ஹிந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் நடத்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு ஊா்வலமாக ரயில் நிலையத்துக்கு வந்தனா்.

அப்போது, ரயில் நிலைய முகப்பில் சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், காவல் ஆய்வாளா் சிவானந்தம் மற்றும் ரயில்வே போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி, 14 பேரையும் கைது செய்து சிதம்பரம் இளமையாக்கினாா் கோயில் தெருவில் உள்ள தனியாா் மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனா்.