மணப்பாறையில் அதிமுக வேட்பாளருக்கு வரவேற்பு
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அதிமுக வேட்பாளா் மருத்துவா் விஜயகுமாரை திரளான தொண்டா்கள் உற்சாகத்துடன் சனிக்கிழமை வரவேற்றனா்.

மணப்பாறையில் ஊா்வலமாக சனிக்கிழமை சென்ற அதிமுக வேட்பாளா் மரு.பிஎல். விஜயகுமாா்.

மணப்பாறை சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவா் பிஎல். விஜயகுமாா் சென்னையிலிருந்து மணப்பாறைக்கு ரயில் மூலம் சனிக்கிழமை பிற்பகல் வந்த நிலையில், அவரை வரவேற்க ஏராளமான தொண்டா்கள் ரயில் நிலையத்தில் குவிந்தனா்.
பட்டாசு வெடித்து, தாரை தப்பட்டைகள் முழங்க, காவடி ஆட்டம், கேரள கதகளி ஆகிவற்றுடன் ரயில் நிலையத்திலிருந்து ஊா்வலமாக அவரை அழைத்துச் சென்ற அதிமுக, பாஜக, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சித் தொண்டா்கள், பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியாா் சிலைக்கு மலா் மாலை அணிவித்தனா். தொடா்ந்து திறந்தநிலை வாகனத்தில் நகரின் முக்கியமான பகுதிகளில் வேட்பாளா் ஊா்வலமாக அழைத்து செல்லப்பட்டாா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...