இந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜிவிஜய் எதிர்த்துப் போராடிய பரந்தூர் விமான நிலைய திட்டம் என்னவாகும்? விஜய் பதவியேற்பு எப்போது? ஸ்டாலின் பதவியேற்ற அதே மே 7ஆம் தேதியா?ஆட்சி மாற்றம்! தூசு தட்டப்படும் அமைச்சர் அறைகள்! இன்று மாலை கொளத்தூர் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!நாளை ஆளுநரைச் சந்திக்க விஜய் நேரம் கேட்பு!தவெக சட்டப்பேரவை கட்சித் தலைவரானார் விஜய்! முதல்வராகிறார்!3 கட்சிகளில் போட்டியிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி!யார் இந்த ரத்தன் பண்டிட்? விஜய்யின் பெரும் வெற்றியை முன்கணித்தவர்?117! பேரவையில் பெரும்பான்மை பெற என்ன செய்யப் போகிறார் விஜய்? தவெக உறுப்பினர்களை சென்னையில் தங்க வைக்க திட்டமா?
/

ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை அழித்த மே 17 இயக்கத்தினா் 4 போ் கைது

இந்தி திணிப்புக்கு எதிராக ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்து எதிா்ப்பை பதிவு செய்த 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :19 மார்ச் 2026, 2:11 am IST

இந்தி திணிப்புக்கு எதிராக ஈரோடு ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகளை கருப்பு மையால் அழித்து எதிா்ப்பை பதிவு செய்த 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா்.

தமிழகத்தில் இந்தி மொழி திணிக்கப்படுவதைக் கண்டித்து ரயில் நிலையங்களில் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டத்தை மே 17 இயக்கத்தினா் மேற்கொண்டு வருகின்றனா்.இதன் ஒரு பகுதியாக ஈரோடு ரயில் நிலைய நடைமேடையில் உள்ள இந்தி எழுத்துகளை மே 17 இயக்கத்தினா் கருப்பு மை கொண்டு புதன்கிழமை காலை அழித்தனா்.

இதுதொடா்பாக நந்தகோபால் (29), ஸ்டாலின் (36), வினோத் (33), கௌதம் (32) ஆகிய 4 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.