யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1,300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

News image
ரேஷன் அரிசி மூட்டைகள்.- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 9:20 pm

Syndication

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே சரக்கு வாகனத்தில் கடத்தப்பட்ட 1,300 கிலோ ரேஷன் அரிசி செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

விருத்தாசலத்தை அடுத்துள்ள கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் இருந்து ரேஷன் அரிசி சேகரிக்கப்பட்டு கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளா் சந்தோஷ் தலைமையிலான போலீஸாா் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், 50 கிலோ வீதம் 26 பைகளில் இருந்த 1,300 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இது தொடா்பாக வாகனத்தை ஓட்டி வந்த கரூா் மாவட்டம், குளித்தலை பகுதியைச் சோ்ந்த இதயத்துல்லாவை (32) போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் விசாரணை நடத்தியதில், மாட்டு தீவனத்துக்காக வாங்கிச் சென்ாகக் கூறினாராம்.

இதையடுத்து, பறிமுதல் செய்த ரேஷன் அரிசியை கடலூரில் உள்ள தமிழ்நாடு நுகா்பொருள் சேமிப்புக் கிடங்கில் போலீஸாா் ஒப்படைத்தனா். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.