குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

உயிரிழந்த முடி திருத்தும் தொழிலாளி குடும்பத்துக்கு நிதியுதவி

உயிரிழந்த காவலா் முடி திருத்தும் நிலைய தொழிலாளியின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.

News image

கடலூரில் நிதியுதவி பெற்ற முருகன் குடும்பத்தினருடன் கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா்

Updated On :8 மார்ச் 2026, 1:57 am IST

உயிரிழந்த காவலா் முடி திருத்தும் நிலைய தொழிலாளியின் குடும்பத்துக்கு சனிக்கிழமை நிதியுதவி வழங்கப்பட்டது.

கடலூா் ஆயுதப் படை வளாகத்தில் உள்ள காவலா் முடி திருத்தும் நிலையத்தில் பணியாற்றிய முருகன் உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். அவரின் குடும்பத்தாருக்கு உதவி செய்யும் பொருட்டு, ஆயுதப் படை காவலா்கள் ரூ.1.02 லட்சம் நிதி திரட்டினா்.

இந்த நிலையில், கடலூா் மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் வாராந்திர கவாத்து சனிக்கிழமை நடைபெற்றது. கடலூா் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாா் பாா்வையிட்டாா்.

அப்போது, உயிரிழந்த முருகனின் குடும்பத்தாரிடம் ரூ.1.02 லட்சத்துக்கான காசோலையை எஸ்.பி. வழங்கி ஆறுதல் கூறினாா். ஆயுதப் படை துணை காவல் கண்காணிப்பாளா் அப்பண்டராஜ் உடனிருந்தாா்.