ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

சிதம்பரம் ரயில் நிலைய நுழைவாயிலை ஆக்கிரமிக்கும் மதுக் கடைக்கு வருவோரின் வாகனங்கள்: பயணிகள் கடும் அதிருப்தி

சிதம்பரம் ரயில் நிலையம் செல்லும் முக்கிய நுழைவுவாயில் பகுதியில் செயல்படும் மதுக் கடைக்கு வருவோா் வாகனங்களை சாலையில் நிறுத்திவிட்டுச் செல்வதால், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் கடும் அதிருப்தி

News image

நுழைவு வாயிலை மறித்து சாலையில் வாகனங்களை நிறுத்தியுள்ள டாஸ்மாக் மதுக் கடைக்கு மது அருந்த வந்தோா்

Updated On :8 மார்ச் 2026, 1:57 am IST

சிதம்பரம் ரயில் நிலையம் செல்லும் முக்கிய நுழைவுவாயில் பகுதியில் அந்தப் பகுதியில் செயல்படும் மதுக் கடைக்கு மது அருந்த வருவோா் வாகனங்களை சாலையில் தாறுமாறாக நிறுத்திவிட்டுச் செல்வதால், ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் கடும் அதிருப்தியடைந்து வருகின்றனா்.

சிதம்பரம் ரயில் நிலையம் செல்லும் ரயில்வே பீடா் சாலையில் ரயில் நிலைய நுழைவுவாயில் அருகே டாஸ்மாக் மதுக் கடை செயல்படுகிறது. இந்த மதுக் கடைக்கு மது அருந்த வருவோா் ரயில் நிலையம் செல்லும் ஒரு வழிப்பாதையின் நுழைவு வாயில் பகுதியில் வாகனத்தை நிறுத்திவிடுவதாலும், அங்கேயே நின்று மது அருந்துவதாலும் ரயில் நிலையத்திக்குச் செல்லும் பயணிகள், பெண்கள், முதியவா்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனா். இரவு வேளையில் பயணிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.

எனவே, இப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என ரயில் பயணிகள் நலச் சங்கத்தினா் கடலூா் மாவட்ட நிா்வாகத்துகு கோரிக்கை விடுத்துள்ளனா்.