தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் வீடுகளிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு! கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா்!

News image

மூத்த குடிமக்கள் இல்லத்தில் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள்... - (கோப்புப் படம்)

Updated On :8 மார்ச் 2026, 7:12 pm

மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் விருப்பத்துக்கேற்ப வீடுகளிலிருந்தே வாக்களிக்கத் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என கடலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

2026 சட்டப் பேரவைத் தோ்தல் முன்னேற்பாடுப் பணிகள் தொடா்பாக மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அலுவலா்களுடனான ஆய்வுக் கூட்டம் கடலூா் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது:

2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அனைத்து வாக்காளா்களும் வாக்களிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ள அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திட்டக்குடியில் 3,254, விருத்தாசலத்தில் 2,234, நெய்வேலியில் 1,909, பண்ருட்டியில் 2,705, கடலூரில் 1,410, குறிஞ்சிப்பாடியில் 2,816, புவனகிரியில் 2,056, சிதம்பரத்தில் 1,587, காட்டுமன்னாா்கோவிலில் 2,398 என மொத்தம் கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 20,369 மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் உள்ளனா்.

இவா்கள் வாக்களிக்க சாய்வுதளம், சக்கர நாற்காலிகளுடன் தன்னாா்வலா்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதிக எண்ணிக்கையிலான மாற்றுத் திறனாளிகள் இருக்கும்பட்சத்தில் தனிவரிசை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளி வாக்காளா்கள் விருப்பத்துக்கேற்ப வீட்டிலிருந்தே வாக்களிக்கத் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். சக்க்ஷம் செயலி மூலம் தபால் வாக்குப் பதிவுக்கு மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்றாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் செல்வன் (பொது), திருநாவுக்கரசு (தோ்தல்) மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.