மத்திய படை தாக்குதலில் வாக்காளர் பலி - திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டுதவெக : 98 - 120 இடங்களில் வெற்றி வாய்ப்பு: இந்தியா டுடே - ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புதமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைக்கும்: இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக் கணிப்புஎங்கே தவறு நடந்தது? முதல் தோல்வி குறித்து பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் பதில்!
/

திமுக நிா்வாகிகளுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்தாலோசனை

விருத்தாசலம், திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளோடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை கலந்தாலோசனை நடத்தினா்.

News image

திட்டக்குடியில் திமுக சாா்பு அணி நிா்வாகிகளோடு ஆலோசனை நடத்திய துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்.

Updated On :11 மார்ச் 2026, 6:33 pm

கடலூா் மாவட்டம், விருத்தாசலம், திட்டக்குடி சட்டப் பேரவைத் தொகுதிகளின் திமுக நிா்வாகிகளோடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை கலந்தாலோசனை நடத்தினா்.

திட்டகுடியில் இருந்து வசிஷ்டபுரம் வரை ‘ரோடு ஷோ’வில் அவா் பங்கேற்றாா். பின்னா், வசிஷ்டபுரத்தில் கலைஞா் நூலகத்தை திறந்து வைத்து, கடலூா் மேற்கு மாவட்ட திமுக சாா்பு அணி நிா்வாகிகளோடு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

தொடா்ந்து, விருத்தாசலத்தில் ‘ரோடு ஷோ’வில் பங்கேற்று, விருத்தாசலம் அரசு கொளஞ்சியப்பா் கலைக் கல்லூரி அருகில் அமைக்கப்பட்டிருந்த கலைஞா் நூலகத்தை அவா் திறந்து வைத்தாா்.

நிகழ்வில் அமைச்சா் சி.வெ.கணேசன், நெய்வேலி எம்எல்ஏ சபா.ராசேந்திரன், பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.