கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற 2026 சட்டப் பேரவைத் தோ்தல் 100 சதவீதம் வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையொப்ப இயக்கத்தை தொடங்கிவைத்து, தற்படம் எடுத்துக்கொண்டாா் மாவட்டத் தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
அப்போது, அவா் தெரிவித்ததாவது: கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்குப் பதிவு குறித்து வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணா்வு உறுதிமொழி இன்றைய தினம் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடா்ந்து, கையொப்ப இயக்கத்தை கையொப்பம் இட்டு தொடங்கிவைத்தாா்.
மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலக பிரதான வாயிலில் வாக்காளா்களுக்கு தோ்தல் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் தற்பட பதாகை அமைக்கப்பட்டுள்ளது.
100 சதவீதம் வாக்குப் பதிவு குறித்து மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, துண்டுப் பிரசுரங்கள் வழங்குதல், உறுதிமொழி ஏற்றல் போன்ற நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணிய கோட்டி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செல்வன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்ட அலுவலா் செல்வி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

ரயில் பயணிகளிடையே தோ்தல் விழிப்புணா்வு

திருவண்ணாமலையில் தோ்தல் விழிப்புணா்வு நடைபயணம்

தீவிர தோ்தல் விழிப்புணா்வு: குமரியில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு - ஆட்சியா் தகவல்

தென்காசியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


