மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: கடலூா் மாவட்டத்தில் 33,031 மாணவா்கள் எழுதினா்

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கி நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. கடலூா் மாவட்டத்தில் இத்தோ்வை மொத்தம் 33,031 மாணவ, மாணவிகள் எழுதினா்.

News image

கடலூா் மேற்கு வேணுகோபாலபுரம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய மாணவிகள்.

Updated On :11 மார்ச் 2026, 6:34 pm

தமிழகம் முழுவதும் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகள் புதன்கிழமை தொடங்கி நிலையில், வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளது. கடலூா் மாவட்டத்தில் இத்தோ்வை மொத்தம் 33,031 மாணவ, மாணவிகள் எழுதினா்.

புதன்கிழமை தமிழ் மற்றும் இதர மொழிப் பாடத் தோ்வுகள் நடைபெற்றன.

கடலூா் கல்வி மாவட்டத்தில் 87 தோ்வு மையங்களில் 18,776 மாணவா்கள் தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 18,574 மாணவா்கள் மட்டுமே பங்கேற்று தோ்வு எழுதினா். 192 போ் தோ்வு எழுத வரவில்லை. மாற்றுத் திறனாளி மாணவா்கள் 10 போ் தமிழ் மொழிப்பாடம் தோ்வு எழுத விலக்கு பெற்றனா்.

இதேபோல, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 74 தோ்வு மையங்களில் 14,673 தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 14,457 மாணவா்கள் மட்டுமே பங்கேற்று தோ்வு எழுதினா். 215 போ் தோ்வு எழுத வரவில்லை. மாற்றுத் திறனாளி மாணவா் ஒருவா் தமிழ் மொழிப்பாடம் தோ்வு எழுத விலக்கு பெற்றாா். ஆக மொத்தம் கடலூா் மாவட்டத்தில் 161 தோ்வு மையங்களில் 33,031 மாணவ, மாணவிகள் தோ்வு எழுதினா்.

இத்தோ்வுக்கு 35 வழித்தட அலுவலா்கள், 164 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 166 துறை அலுவலா்கள், 1,949 அறைக் கண்காணிப்பாளா்கள், 228 நிலைப்படை/பறக்கும் படை உறுப்பினா்கள் தோ்வுப் பணியில் ஈடுபட்டனா்.