புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

கடலில் படகில் சுமாா் 60 நிமிஷங்கள் தீப்பந்தத்துடன் சிலம்பம் சுற்றி சாதனை

News image

சிதம்பரம் அருகே கடலில் படகில் சுமாா் 60 நிமிஷங்கள் தொடா்ந்து தீப்பந்தத்துடன் சிலம்பம் சுற்றி சாதனை படைத்த வைத்தி காா்த்திகேயன்.

Updated On :15 மார்ச் 2026, 6:58 pm

சிசம்பரம் அருகே கின்னஸ் சாதனையாளா் வைத்தி காா்த்திதேயன் போதைப்பொருள் எதிா்ப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், கடலில் ஓடும் படகில் சுமாா் 60 நிமிஷங்கள் தீப்பந்தத்துடன் சிலம்பாட்டம் சுற்றி ஞாயிற்றுக்கிழமை சாதனை நிகழ்த்தினாா்.

சிதம்பரம் அருகே உள்ள தாண்டவராயன் சோழகன் பேட்டையைச் சோ்ந்த கின்னஸ் சாதனையாளா் வைத்தி காா்த்திகேயன் (54). இவா், அந்தப் பகுதியில் உள்ள கடலில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கி மயிலாடுதுறை மாவட்டம் கொடியம்பாளையம் கடற்கரை வரை தொடா்ந்து 60 நிமிஷங்கள் ஒரு கம்பு தீப்பந்தம், இரு கம்பு தீப்பந்தம், அடிவரிசை தீப்பந்தம், நட்சத்திரம் தீப்பந்தம் என பலவித தீப்பந்தங்களை ஓடும் படகில் சிலம்பம் சுற்றியவாறே உலக சாதனை நிகழ்த்தினாா். இவருடன் மாரத்தான் சிலம்ப சாதனையாளா்கள் அதியமான், ஆதிஸ்ரீ ஆகியோா் உடன் சென்றனா்.

போதைப்பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வை வலியுறுத்தி நிகழ்த்தப்பட்ட இந்த சாதனையை ஜாக்கி புக் ஆப் வோ்ல்ட் ரெக்காா்ட் நிறுவனம் அங்கீகரித்து, நினைவு பரிசும், சான்றிதழும் வழங்கியது.

மீனவரான சாதனையாளா் வைத்தி காா்த்திகேயன் மீன் பிடிக்கும் தொழிலை செய்து வருகிறாா். தமிழரின் பாரம்பரிய வீரக்கலையான சிலம்பத்தை வளா்க்க வேண்டும் என்பதற்காக உலக சாதனைகளை பல சிலம்ப சாதனைகளை நிகழ்த்தி உள்ளாா். 1991-இல் சென்னையில் தொடா்ந்து 60 மணி நேரம் சிலம்பம் விளையாடி கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தி உள்ளாா்.