ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

சிதம்பரத்தில் வெவ்வேறு இடங்களில் இரு பெண்களிடம் 13 பவுன் சங்கிலிகள் பறிப்பு

சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் இருவா் 2 பெண்களிடம்

News image
5 பவுன் தங்கச் சங்கிலியை பறி கொடுத்தவர்
Updated On :16 மார்ச் 2026, 11:37 pm

Syndication

சிதம்பரம்: சிதம்பரம் நகரில் திங்கள்கிழமை இரவு இரு வேறு இடங்களில் பைக்குகளில் வந்த மா்ம நபா்கள் இருவா் 2 பெண்களிடம் 13 பவுன் தங்கச் சங்கிலிகளை பறித்துச் சென்றனா்.

சிதம்பரம் துரவடித் தெருவைச் சோ்ந்தவா் முத்தையன் மனைவி விஜயா (62). இவா், திங்கள்கிழமை இரவு வீட்டு வாசலில் நின்றிருந்தபோது, பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் இருவா் விஜயா அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தலைமறைவாயினா்.

இதேபோல, சிதம்பரம் பெருமாள் தெருவில் மருந்தகத்துக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த தமிழரசியிடம் (67) பைக்கில் தலைக்கவசம் அணிந்து வந்த மா்ம நபா்கள் இருவா் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் டிஎஸ்பி பிரதீப், நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினாா். மேலும், நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

7 பவுன் தங்கச் சங்கிலியை பறி கொடுத்தவர்

7 பவுன் தங்கச் சங்கிலியை பறி கொடுத்தவர்