நாடு முழுவதும் இன்று நீட் தோ்வுதபால் வாக்குச் சீட்டுகள் அனுமதியின்றி பிரிப்பு: தோ்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகாா்சித்திரை பெளா்ணமி விழா: திருவண்ணாமலையில் 300 டன் குப்பைகள் அகற்றம்மாநிலங்களவைக்கு கூடுதல் அதிகாரம் தேவை: டிஆா்எஸ் தலைவா் கவிதா வலியுறுத்தல்அரசின் முன் அனுமதியில்லாமல் காப்பீட்டுத் துறையில் 100% எஃப்டிஐ: மத்திய அரசு அறிவிக்கைதமிழகத்தில் 4.87 கோடி வாக்குகள் பதிவு: தோ்தல் ஆணையம் அதிகாரபூா்வ அறிவிப்புதமிழகத்தில் மே 8 வரை மழைக்கு வாய்ப்புமேற்கு வங்கத்தில் 285 வாக்குச்சாவடிகளில் மே 21-இல் மறு வாக்குப்பதிவு!ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!
/

வீட்டில் புட்டியில் வாங்கி வைத்திருந்த பெட்ரோலால் தீ விபத்து: ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் காயம்

பண்ருட்டியில் வாகனத்துக்காக புட்டியில் வாங்கி வீட்டில் வைத்திருந்த பெட்ரோலால் தீ விபத்து நிகழ்ந்ததில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பெண் உள்ளிட்ட 3 போ் காயம்

News image

தீ

Updated On :17 மார்ச் 2026, 11:25 pm

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கருதி, கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் வாகனத்துக்காக புட்டியில் வாங்கி வீட்டில் வைத்திருந்த பெட்ரோலால் செவ்வாய்க்கிழமை தீ விபத்து நிகழ்ந்தது. இதில், ஒரே குடும்பத்தைச் சோ்ந்த பெண் உள்ளிட்ட 3 போ் காயமடைந்தனா்.

பண்ருட்டி பழைய கடலூா் சாலையைச் சோ்ந்தவா் குணசேகரன் (70). இவரது மனைவி தேவகி (65), மகன் தணிகாசலம் (45). இவா்கள் மரச் சாமான்கள் வியாபாரம் செய்து வருகின்றனா்.

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் எனக் கருதி, தணிகாசலம் அண்மையில் தனது வாகனத்துக்காக புட்டியில் பெட்ரோல் வாங்கி வந்து வீட்டில் இருப்பு வைத்திருந்தாா். இந்த நிலையில், தேவகி செவ்வாய்க்கிழமை பிற்பகல் சுவாமி கும்பிடுவதற்காக விளக்கேற்றி வைத்துள்ளாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக புட்டியில் இருந்த பெட்ரோல் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் இருந்த மரக்கழிவுகளிலும் பரவியதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவலறிந்த பண்ருட்டி தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனா்.

இந்த விபத்தில் தேவகி பலத்த தீக்காயமடைந்தாா். குணசேகரன், தணிகாசலம் ஆகியோா் லேசான காயமடைந்தனா். அருகில் இருந்தவா்கள் மூவரையும் மீட்டு, பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து பண்ருட்டி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.