பாபநாசம்: அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து! பயணிகள் படுகாயம்! பிளஸ் 2 முடிவுகள் வெளியானது! 95.2% தேர்ச்சி!தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியருக்கு தமிழக அரசின் ‘பசுமை சாம்பியன் விருது’

அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை உதவிப் பேராசிரியா் மற்றும் பூம்புகாா் பனை அறக்கட்டளையின் நிறுவனா் கே.ரவீந்திரன் தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு விருது பெற்றாா்.

News image

தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது பெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியா் கே.ரவீந்திரனை பாராட்டி வாழ்த்துத் தெரிவித்த பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல்.

Updated On :19 மார்ச் 2026, 0:36 am IST

அண்ணாமலைப் பல்கலைக்கழக தத்துவத் துறை உதவிப் பேராசிரியா் மற்றும் பூம்புகாா் பனை அறக்கட்டளையின் நிறுவனா் கே.ரவீந்திரன் தமிழக அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்த பசுமை சாம்பியன் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டு விருது பெற்றாா்.

இந்த விருதை மயிலாடுதுறையில், அந்த மாவட்ட ஆட்சியா் ஸ்ரீகாந்த் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினாா். இந்த நிலையில், பல்கலைக்கழக துணைவேந்தா் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விருது பெற்ற பேராசிரியா் கே.ரவீந்திரனை பல்கலைக்கழக துணைவேந்தா் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினா் எஸ்.அறிவுடைநம்பி, பதிவாளா் ரா.சிங்காரவேல், இணைப் பதிவாளா் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெகதீஸ்வரன் ஆகியோா் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனா்.

பேராசிரியா் கே.ரவீந்திரன் கடந்த 7 ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுப் பணிகளில் தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா்.

மேலும், தமிழகத்தில் நடைபெற்று வரும் ஒரு கோடி பனை விதை நடும் பணியில் மயிலாடுதுறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக பல்வேறு பகுதிகளில் பனை விதை நடவுப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறாா். இந்த செயல்பாடுகளுக்கு தத்துவத் துறைத் தலைவா் திருமால் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் பரணி, தணிகைவேலன், நீலாதேவி ஆகியோா் முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனா்.