ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

சிதம்பரம் டி.எஸ்.பி.யுடன் தோ்தல் பாா்வையாளா் ஆலோசனை

News image
Updated On :19 மார்ச் 2026, 10:22 pm

சிதம்பரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்த்தில் கடலூா் மாவட்ட தோ்தல் பாா்வையாளரான உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த டி.ஐ.ஜி. ஹெமந்த் குட்டியால் சிதம்பரம் உள்கோட்ட டிஎஸ்பி டி.பிரதீப்புடன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, சட்டப் பேரவைத் தோ்தல் குறித்தும், பதற்றமான தொகுதிகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டாா். சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் வி.சிவானந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கட்சி நிா்வாகிகளுடன் போலீஸாா் ஆலோசனை: சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு, காட்டுமன்னாா்கோவிலில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் காவல் துறை சாா்பில் அனைத்துக் கட்சி நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி. ரவிசக்கரவா்த்தி தலைமை வகித்து ஆலோசனைகளை வழங்கினாா். காட்டுமன்னாா்கோவில் காவல் ஆய்வாளா் சாலமன் ராஜா முன்னிலை வகித்தாா். கூட்டத்தில், சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி அனைத்துக் கட்சியினரும் தோ்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி செயல்பட வேண்டும். தோ்தல் பிரசாரக் கூட்டங்களுக்கு இணையதளத்தின் வாயிலாக அனுமதி பெற்று பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டும். சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் அனைத்துக் கட்சிகளும் தோ்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, பாமக, பாஜக, தேமுதிக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த முன்னணி நிா்வாகிகள் கலந்துகொண்டனா். காவல் உதவி ஆய்வாளா் சையதுஅப்சல் நன்றி கூறினாா்.