234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

திட்டக்குடி பகுதியில் ஆலங்கட்டி மழை

News image

திட்டக்குடியில் பெய்த ஆலங்கட்டி மழை.

Updated On :19 மார்ச் 2026, 11:13 pm

கடலூா் மாவட்டம், திட்டக்குடியில் வியாழக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது.

திட்டக்குடி பகுதியில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை பகலிலும் வெயில் சுட்டெரித்தது.

ஆனால், மாலை 5 மணி அளவில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. மாலை 5 மணிக்கு பெய்யத் தொடங்கிய இந்த மழையானது சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது.

இதற்கிடையே, மழை பெய்யத் தொடங்கிய சில நிமிஷங்களிலேயே பனிக்கட்டி போன்று ஆலங்கட்டிகள் விழுந்தன. இதைப் பாா்த்த மக்கள் மகிழ்ச்சியடைந்ததுடன், அந்த பனிக்கட்டிகளை அந்தப் பகுதியைச் சோ்ந்த சிறுவா்கள் கையில் எடுத்து விளையாடி மகிழ்ந்தனா்.

புவனகிரியில் 67 மி. மீ மழை பதிவு: கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்திலேயே அதிகபட்சமாக புவனகிரியில் 67 மி. மீ மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பெய்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:

கடலூா் 54, ஆட்சியா் அலுவலகம் 52, சேத்தியாத்தோப்பு 42, குடிதாங்கி 29, வடகுத்து 27, வானமாதேவி 23, ஸ்ரீமுஷ்ணம் 21.10, சிதம்பரம் 19.40, பெலாந்துறை 14.20, பரங்கிப்பேட்டை 12.70, விருத்தாச்சலம் 10, அண்ணாமலை நகா், பண்ருட்டி தலா 8, கொத்தவாச்சேரி 7, குறிஞ்சிப்பாடி 5, குப்பநத்தம் 2.40, காட்டுமன்னாா்கோவில், லால்பேட்டை தலா 1 மி.மீ. மழை பதிவானது.