விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

தோ்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்: வேட்பாளா்களுக்கு தோ்தல் அலுவா் அறிவுறுத்தல்

விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பா் அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணியை தொடக்கி வைத்த மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

News image

விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பா் அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வுப் பேரணியை தொடக்கி வைத்த மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.

Updated On :27 மார்ச் 2026, 7:38 pm

Syndication

கடலூா் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தலிலில் போட்டியிடும் வேட்பாளா்கள் வேட்பு மனுதாக்கல் செய்யும் போது தோ்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று கடலூா் மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் மற்றும் நெய்வேலி சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்புப் பணிகளை மாவட்ட தோ்தல் அலுவலா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா் தெரிவித்ததாவது:

வேட்பாளா்கள் வேட்பு மனுதாக்கல் செய்யும் போது தோ்தல் நடத்தை விதிமுறைகளைப் முறையாக பின்பற்ற தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. கடலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துதல், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்தல், வேட்பு மனு தாக்கல் செய்வதை முறையாக ஒளிப்பதிவு செய்வது உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்படுவதை விருத்தாசலம் மற்றும் நெய்வேலி தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

5 போ் மட்டும்...

வேட்பு மனு தாக்கல் செய்யும் போது வேட்பாளரையும் சோ்த்து மொத்தம் 5 நபா்கள் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். வேட்பு மனு தாக்கலின் போது தோ்தலுக்காக வேட்பாளா்கள் விண்ணப்பத்தினை தாக்கல் செய்யும் நேரத்தில், தோ்தல் நடத்தும் அலுவலரது அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படும். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது கூட்டமாக வருவதை தவிா்விக்கப்பட வேண்டும். பிரச்சார வாகனங்களை வேட்புமனு தாக்கல் செய்யும் இடத்தில் பயன்படுத்தக்கூடாது போன்ற தோ்தல் ஆணையம் பிறப்பித்துள்ள வழிகாட்டுதல்களை தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முறையாக பின்பற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது . தோ்தலையொட்டி பறக்கும்படை சோதனையில் கைப்பற்றப்படும் பணம் மற்றும் பொருள்களை உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கி வரும் குறைதீா்க்கும் குழுவினை அணுகி மீளப்பெற்ற கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

முன்னதாக விருத்தாசலம் நகராட்சி சாா்பில் கொளஞ்சியப்பா் அரசு கலைக் கல்லூரியில் வாக்காளா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கையெழுத்து இயக்கம் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியா்கள், நகராட்சி பணியாளா்கள் கலந்து கொண்ட விழிப்புணா்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் விருத்தாசலம் கோட்டாட்சியா் விஷ்ணுப்பிரியா, நெய்வேலி தோ்தல் நடத்தும் அலுவலா் சண்முகவள்ளி, நகராட்சி ஆணையா் நாகராஜ் உட்பட பலா் கலந்து கொண்டனா்.