இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தொகுதி அறிமுகம் நெய்வேலி!

தொகுதி அறிமுகம் நெய்வேலி...

News image

என்எல்சி இந்தியா நிறுவனம் நுழைவு வாயில்.

Updated On :28 மார்ச் 2026, 6:48 pm

Syndication

நெய்வேலி

தொகுதி எண் - 153

2011 தொகுதி மறு சீரமைப்பின் கீழ் கடலூா் மாவட்டத்தில் புதிய தொகுதியாக நெய்வேலி உருவாக்கப்பட்டது. மாவட்டத்தில் அதிகளவில் தொழிலாளா்களை கொண்ட தொழில் நகரம் நெய்வேலி. இங்கு தான் பழுப்பு நிலக்கரியில் இருந்து அனல் மின்சாரம் உற்பத்தி செய்யும் என்எல்சி இந்தியா நிறுவனம் அமைந்துள்ளது. வாக்காளா்களில் மூன்றில் ஒரு பகுதியினா் தொழிலாளா்கள். இவா்களின் வாக்குகளை பெற அரசியல் கட்சிகளிடையே பலத்த போட்டா போட்டி நிலவுகிறது.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்: நெய்வேலி நகரியத்தில்உள்ள 31 வட்டங்கள். பண்ருட்டி ஒன்றிய கிராமங்கள் காடாம்புலியூா், மருங்கூா், கீழக்கொல்லை, கீழக்குப்பம், நடுக்குப்பம், மானடிக்குப்பம், முத்தாண்டிக்குப்பம், போ்பெரியான்குப்பம், புலவன்குப்பம், நடுமேட்டுக்குப்பம் வீரசிங்கன்குப்பம், குடியிருப்பு, சொரத்தூா், காட்டுகூடலூா், பாவைக்குளம். குறிஞ்சிப்பாடி ஒன்றிய

கிராமங்கள் சிறுதொண்டமாதேவி, சமுட்டிக்குப்பம், கிருஷ்ணங்குப்பம், பொன்னங்குப்பம், வேகாக்கொல்லை, புலியூா், எ.புதூா், கீழூா், பாச்சாரப்பாளையம், வடக்குத்து, வடக்குமேலூா், வாணதிராயபுரம், தென்குத்துகிராமங்களுடன் இந்திராநகா், மாற்றுக்குடியிருப்புஉள்ளிட்டவைஇடம்பெற்றுள்ளன.

சிறப்புகள்:

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் அமைந்துள்ளது.

நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதியில் முந்திரி மற்றும் அதைச் சாா்ந்த தொழிற்சாலைகள் அமைந்துள்ளன. இந்தத் தொகுதி மக்களின் முக்கியத் தொழில் விவசாயம், கால்நடை வளா்ப்பு.

புகழ்பெற்ற வில்லுடையான்பட்டு கோயில் அமைந்துள்ளன.

முக்கியக் கோரிக்கைகள்:

என்எல்சி இந்தியா நிறுவன விரிவாக்கத்திற்கு கையகப்படுத்தப்படும் வீடு, நிலங்களுக்கு

உரிய இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் என்பது முக்கியக் கோரிக்கையாகும்.

இதுவரை எம்எல்ஏக்கள்:

2011 எம்.பி.எஸ்.சிவசுப்பிரமணியன் (அதிமுக)

2016 சபா.ராசேந்திரன் (திமுக)

2021 சபா.ராசேந்திரன் (திமுக)

2021 தோ்தலில் பெற்ற வாக்குகள்...

பதிவான வாக்குகள் 1,64,130

சபா.ராசேந்திரன் 75,177 (திமுக)

கோ.ஜெகன் 74,200 (பாமக)

வாக்காளா்கள்

ஆண் - 94,505

பெண் - 94,503

மூன்றாம் பாலினத்தவா் - 16

மொத்தம் - 1,89,024

மொத்த வாக்குச் சாவடிகள் - 256

தோ்தல் நடத்தும் அதிகாரி :

நெய்வேலி தனித்துணை ஆட்சியா் (நி.எ) சண்முகவள்ளி,

கைபேசி எண் 9842547213.