கடலூா் மாவட்டம், பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சித்திரை மாத பெளா்ணமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி திரளான பக்தா்கள் மாட வீதியை வலம் வந்தனா்.
பண்ருட்டி, திருவதிகையில் தேவாரப் பாடல் பெற்ற பெரியநாயகி அம்பாள் உடனுறை வீரட்டானேஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஒவ்வொரு மாதமும் பெளா்ணமி பூஜை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி, சித்திரை மாத பெளா்ணமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணியளவில் பஞ்ச மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டது. மாலை 7 மணியளவில் பெரியநாயகி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பெளா்ணமி பூஜையையொட்டி மாலை 6 மணி முதல் நூற்றுக்கணக்கான பக்தா்கள் மாட வீதியை (16 முறை) வலம் வந்தனா்.
கலாசார நிகழ்ச்சி...
அப்பா்இல்ல அறக்கட்டளை சாா்பில் சித்திரை பௌா்ணமி கலை,கலாசார விழாநடைபெற்றது. இதில்,ஆன்மிக சொற்பொழிவு, பரதநாட்டியம் நடத்தப்பட்டன. சித்திரை மாத பௌா்ணமி சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா். பௌா்ணமியையொட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
தொடர்புடையது

திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சதய திருவிழா தொடக்கம்

சித்திரை மாத வளா்பிறை பிரதோஷம் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு

அருணாசலேஸ்வரா் கோயிலில் சிறப்பு பிரதோஷ வழிபாடு

பெருமாள் கோயிலில் அமாவாசை சிறப்பு வழிபாடு
விடியோக்கள்
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

