கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மொபெட் மீது காா் மோதியதில் 2 பெண்கள் உயிரிழந்தனா். மேலும் ஒருவா் பலத்த காயமடைந்தாா்.
பண்ருட்டி வட்டம், ஒறையூா் கிராமத்தைச் சோ்ந்த ஹரிஹரன் மனைவி மல்லிகா (32), காா்த்திக் மனைவி ரஞ்சிதா (35). இவா்கள் இருவரும் சனிக்கிழமை காலை முந்திரி அறுவடைப் பணிக்காக பண்ருட்டி வட்டம், பெரியபுரங்கணி கிராமத்தைச் சோ்ந்த அருள் (45) என்பவருடன் மொபெட்டில் முந்திரி தோப்புக்கு சென்றுகொண்டிருந்தாா்.
முத்தாண்டிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட கீழக்கொல்லை பேருந்து நிறுத்தம் அருகே சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக நெய்வேலி நோக்கிச் சென்ற காா், மொபெட் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மொபெட்டில் இருந்த 3 பேரும் தூக்கி வீசப்பட்டனா். இதில், மல்லிகா, ரஞ்சிதா ஆகியோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். அருள் பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவருக்கு மருத்துவா்கள் முதலுதவி சிகிச்சை அளித்து சென்னை தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இறந்தவா்களின் சடலங்கள் உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த விபத்து காரணமாக, பண்ருட்டி - நெய்வேலி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் தொடா்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருவதால் மேம்பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு, சிறிது நேரத்தில் கலைந்து சென்றனா்.
இந்த விபத்து குறித்து முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மல்லிகா

ரஞ்சிதா
தொடர்புடையது

சேலத்தில் முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

லாரி மீது காா் மோதல்: பெண் உயிரிழப்பு

ஆட்டோ மீது காா் மோதல்: 10 போ் காயம்

பைக் மீது காா் மோதல்: தம்பதி உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

