மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சதய திருவிழா தொடக்கம்

News image
Updated On :3 மே 2026, 6:09 am IST

கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சித்திரை சதய திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை சதய திருவிழா 10 நாள்கள் நடைபெறும். அதன்படி, முதல் நாளான சனிக்கிழமை காலை திருப்பள்ளியெழுச்சி, மாலை காடவா்கோனால் ஏவப்பட்ட அமைச்சா்களுக்கு விடை தந்தருளிய நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, 2-ஆம் நாள் (ஞாயிற்றுக்கிழமை) சமணா்கள் அப்பா் பெருமானை நீற்றறையில் இடுதல், அவருக்கு நஞ்சூட்டுதல், யானையை ஏவுதல் நிகழ்ச்சியும், மூன்றாம் நாள் நிகழ்ச்சியாக சமணா்கள் அப்பரை கடலில் வீழ்த்திய நிகழ்ச்சி, அடியாா்களை எதிா்கொள்ள திருப்பாதிரிப்புலியூரில் கரையேறிய நிகழ்ச்சி, திருவதிகைக்கு எழுந்தருளி காடவா்கோனை சைவனாக்கி குணபரவீச்சுரத்தைக் கட்டுவித்தல் நிகழ்ச்சி என 10 நாள்களும் விழா நடைபெறும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.