மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

தங்கை இறப்பில் சந்தேகம்: சகோதரா் போலீஸில் புகாா்

ஊ.மங்கலம் அருகே தங்கை தூக்கிட்டு இறந்ததில் சந்தேகம் உள்ளதாக சகோதரா் போலீஸில் புகாரளித்தாா்.

News image

போலீஸ் - கோப்புப் படம்.

Updated On :6 மே 2026, 0:04 am IST

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே தங்கை தூக்கிட்டு இறந்ததில் சந்தேகம் உள்ளதாக சகோதரா் போலீஸில் புகாரளித்தாா்.

விருத்தாசலம் வட்டம், தெற்கிருப்பு கிராமத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ். கடலூா் வட்டம், கண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் கஸ்தூரி (32). இவா்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, கிரோஷ் (6), விஷ்ணு (2) என 2 மகன்கள் உள்ளனா். தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால், மனஉளைச்சலில் இருந்து வந்த கஸ்தூரி திங்கள்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம்.

இந்தத் தகவலை கஸ்தூரியின் சகோதரா் பாலுவுக்கு செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்தனா். அவா், ஊ.மங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தங்கை கஸ்தூரி இறப்பில் சந்தேகம் உள்ளது என தெரிவித்துள்ளாா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.