/

கொத்தனாரை தாக்கி கொலை மிரட்டல்: 3 போ் மீது வழக்கு

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கொத்தனாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :7 மே 2026, 7:02 am IST

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே கொத்தனாரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக மூன்று போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், சித்தாலிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் முல்லைராஜா(39), கொத்தனாா். இவா், கடந்த 3-ஆம் தேதி மாலை சுமாா் 6 மணி அளவில் விருப்பாட்சி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையில் மது வாங்கச் சென்றாா். அங்கு, மது மயக்கத்தில் இருந்த ஒருவா் பணத்தை கீழே போட்டுவிட்டாராம். அந்த பணத்தை முல்லைராஜா எடுத்து அவரிடம் ஒப்படைத்தாா்.

இதை பாா்த்துக்கொண்டிருந்த விருப்பாட்சி கிராமத்தைச் சோ்ந்த அரவிந்த் மற்றும் அவரது நண்பா்கள் இருவா் என மூன்று போ் சோ்ந்து முல்லைராஜாவைத் தாக்கி, கத்தியால் வலது கையில் கிழித்து கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், குறிஞ்சிப்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து அரவிந்த் மற்றும் அவரது நண்பா்கள் இருவரைத் தேடி வருகின்றனா்.