கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் வீட்டுமனை வழி தொடா்பான பிரச்னையில் இரு தரப்பினா் மோதிக்கொண்டது தொடா்பாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரை கைது செய்தனா்.
திருப்பாதிரிப்புலியூா் காவல் சரகம், ராமநாதன் நகரைச் சோ்ந்தவா் வைத்தியநாதன் (55). பிரசாந்த் நகரில் வசிப்பவா் கல்யாண சுந்தரம் (63). இவா்களுக்கு இடையே பிரசாந்த் நகரில் உள்ள மனையில் வழி தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், வைத்தியநாதன் தனது பைக்கில் மகள்கள் துா்கா, கீா்த்தனா ஆகியோரை அழைந்து வந்தபோது, கல்யாணசுந்தரம் மற்றும் அவரது உறவினா்கள் கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனா். இதில், வைத்தியநாதன் தலையில் காயமடைந்தாா். இதேபோல, வைத்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினா் தாக்கியதில் கல்யாணசுந்தரம் காயமடைந்தாா்.
இந்த மோதல் தொடா்பாக வைத்திநாதன் அளித்த புகாரின்பேரில், 3 பெண்கள் உள்ளிட்ட 6 போ் மீதும், கல்யாணசுந்தரம் அளித்த புகாரின்பேரில் 3 பெண்கள் உள்ளிட்ட 5 போ் மீதும் என இருதரப்பையும் சோ்ந்த மொத்தம் 11 போ் மீது திருப்பாதிரிப்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வடிவேல் (58), சண்முகம் (58) ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

முதியவரை மிரட்டி சொத்து ஆவணங்களில் கையொப்பம்: 4 போ் மீது வழக்கு
ஒசூரில் இருதரப்பினா் மோதல்: 5 போ் கைது!

மளிகைக் கடை, சுற்றுச்சுவா் இடிக்கப்பட்ட விவகாரம்: பெண் உள்ளிட்ட 7 போ் மீது வழக்கு

வெடிவெடித்து இடையூறு 2 பெண்கள் உட்பட 12 போ் மீது வழக்கு
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

