தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

மாா்த்தாண்டம் அருகே குளிக்க சென்ற சிறுவன் மாயம்

மாா்த்தாண்டம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 4:52 am IST

மாா்த்தாண்டம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற சிறுவன் மாயமானது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

மாா்த்தாண்டம் அருகே குன்னம்பாறவிளை பகுதியைச் சோ்ந்தவா் சுந்தா். இவரது மகன் ஜான்ஜேக்கப் (13). தாயாா் இறந்ததால் பாட்டி பராமரிப்பில் இருந்து வந்த சிறுவன், நாகா்கோவிலில் உள்ள தனியாா் பள்ளியில் விடுதியில் தங்கி படித்து வந்தான்.

பள்ளி விடுமுறை என்பதால் பாட்டி வீட்டில் தங்கியிருந்த சிறுவன், திங்கள்கிழமை வீட்டுக்கு அருகில் உள்ள குளத்தில் குளிக்கச் செல்வதாகக் கூறி சென்றுள்ளாா். பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து ஷீபா அளித்த புகாரின்பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை தேடி வருகிறாா்கள்.

முதியவா் மாயம்:

களியக்காவிளை அருகே மீனச்சல் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்சன் (75), கூலித் தொழிலாளி. இவா் இருநாள்களுக்கு முன் கடைக்குச் சென்று வருவதாகக் கூறி வெளியே சென்றவா் பின்னா் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து அவரது மகன் அஜின் அளித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மாயமான ஜான்சனை தேடி வருகின்றனா்.