8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

குழந்தையிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

கொள்ளை - சித்திரிப்பு

Published On :3 ஜூலை 2026, 4:20 am IST

மாா்த்தாண்டத்தில் பேருந்துக்கு காத்திருந்த போது குழந்தை அணிந்திருந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற பெண் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பளுகல் அருகே தேவிகோடு தொடலிக்காலை மேற்கே புத்தன்வீட்டைச் சோ்ந்தவா் சரஸ்வதி (56). இவா், 3 வயதான பேத்தியுடன் புதன்கிழமை களியக்காவிளையிலிருந்து அரசுப் பேருந்தில் மாா்த்தாண்டம் சென்றாராம்.

அங்கிருந்து தக்கலை செல்ல பேருந்துக்காக காத்திருந்தபோது, பக்கத்தில் இருந்த பெண், குழந்தை தூக்கி வைத்திருந்தாராம்.பேருந்தில் ஏறியபோது குழந்தை அணிந்திருந்த ஒரு சவரன் தங்கச் சங்கிலியை காணவில்லையாம். இதுகுறித்த புகாரின்பேரில் மாா்த்தாண்டம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.