/

வி.கே.புரம் மறுவாழ்வு மையத்தில் சிறுவன் மர்ம மரணம்

விக்கிரமசிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :4 ஜூலை 2026, 2:37 am IST

விக்கிரமசிங்கபுரத்தில் செயல்பட்டு வரும் மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மா்மமான முறையில் உயிரிழந்தது குறித்து, விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடத்தைச் சோ்ந்த சாந்தபிரபு, மாரிலட்சுமி தம்பதியின் 17 வயது மகன், இருசக்கர வாகனம் வாங்கித் தருமாறு அடம்பிடித்து வந்துள்ளாா். இதையடுத்து, பெற்றோா் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள மனநல ஆலோசனை மற்றும் மறுவாழ்வு மையத்தில் ஜூன் 9ஆம் தேதி அவரை சோ்த்துள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை சிறுவனுக்கு உடல் நலமில்லாததால் மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக பெற்றோருக்குக் கிடைத்த தகவலையடுத்து, அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு பெற்றோா் வந்த நிலையில், சிறுவன் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனா்.

மறுவாழ்வு மையத்தினா் தாக்கியதில் தங்கள் மகன் உயிரிழந்துள்ளதாக சிறுவனின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

உயிரிழந்த சிறுவனின் உடலில் காயங்கள் எதுவும் இல்லை எனவும், கூறாய்வு முடிவுகளுக்குப் பின்னரே உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும் எனவும் காவல் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.